/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் பல்கலையில் காளான் வளர்ப்பு பயிற்சி
/
வேளாண் பல்கலையில் காளான் வளர்ப்பு பயிற்சி
ADDED : ஜூன் 03, 2024 12:25 AM
பொள்ளாச்சி;தமிழ்நாடு வேளாண் பல்கலையில், பயிர் நோயியல் துறை சார்பில், ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஜூன் மாதத்திற்கான பயிற்சி வரும், 5ம் தேதி நடக்கவுள்ளது.
தற்போதைய காளான் வளர்ப்பு விவசாயிகளிடம் பெரிதும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கான பயிற்சி மற்றும் வழிமுறைகளை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அவ்வப்போது வழங்கி வருகிறது.
இந்நிலையில், வேளாண்பல்கலையில், காளான் வளர்ப்பு முறைகள், நோய் மேலாண்மை. உற்பத்தி, சந்தைப்படுத்துதல் மதிப்பு கூட்டுதல் உள்ளிட்ட அனைத்தும் செய்முறை விளக்கங்களுடன், வல்லுநர்கள் பயிற்சி அளிக்கவுள்ளனர்.
ஆர்வமுள்ளவர்கள், பயிற்சி நாளன்று, 590 ரூபாய் கட்டணம் செலுத்தி பங்கேற்கலாம். காலை, 10:00 முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி நடைபெறும். மேலும் விபரங்களுக்கு, 0422- 6611336/ 6611226 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என, அறிவிக்கப்பட்டுள்ளது.