ADDED : பிப் 24, 2025 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, ; கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில், காளான் வளர்க்க மூன்று நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிர் நோயியல் துறை சார்பில், பல்கலை வளாகத்தில் நாளை துவங்கும் இப்பயிற்சி, வரும் 28ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. இதில், காளான் விதை உற்பத்தி மற்றும் காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சிக் கட்டணம் வரிகள் உட்பட 5,900 ரூபாய். மேலும் விவரங்களுக்கு, 96294 96555 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.