/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'எழுத்தாளர்களை மதிக்கும் பண்பு இருக்க வேண்டும்'
/
'எழுத்தாளர்களை மதிக்கும் பண்பு இருக்க வேண்டும்'
ADDED : ஏப் 25, 2024 06:23 AM
கோவை : உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு, கோவை விஜயா பதிப்பகம் வாசகர் வட்டம் சார்பில், எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் பெயர்களில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த ஆண்டுக்கான ஜெயகாந்தன் விருது, எழுத்தாளர் சங்கர நாராயணனுக்கு வழங்கப்பட்டது. விருது தொகையாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
புதுமைப்பித்தன் விருது மயிலன் சின்னப்பனுக்கும், கவிஞர் மீரா விருது கவிஞர் ஸ்டாலின் சரவணனுக்கும் வழங்கப்பட்டது. விருது தொகையாக 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது.
சக்தி வை.கோவிந்தன் விருது, திருவொற்றியூர் அரசு கிளை நுாலகர் பேனிக்பாண்டியன், வானதி விருது கும்பகோணம் மார்க்கண்டேயா புக் கேலரி கல்யாணசுந்தரம், விஜயா பதிப்பகம் 'அன்பின் பெருமழை அப்பச்சி' தொடர் வாசகர் விருது கோபி, குமரேசன், தங்க முனியாண்டி ஆகியோருக்கு விருது தொகையாக தலா 25 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, கவிஞர் தங்கமூர்த்தி மற்றும் விஜயா பதிப்பகம் உரிமையாளர் வேலாயுதம் ஆகியோர் விருதுகளை வழங்கினர்.
கவிஞர் மரபின்மைந்தன் முத்தையா வாழ்த்தி பேசுகையில், ''நல்ல இலக்கியங்கள் உருவாக வேண்டும் என்றால், எழுத்தாளர்களை மதிக்கும் பண்பு இருக்க வேண்டும்,'' என்றார்.

