/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்முட்டி பஸ் நிறுத்தத்தில் 'முட்டிக்கோ மோதிக்கோ': தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவதால் படாாதபாடு
/
தேர்முட்டி பஸ் நிறுத்தத்தில் 'முட்டிக்கோ மோதிக்கோ': தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவதால் படாாதபாடு
தேர்முட்டி பஸ் நிறுத்தத்தில் 'முட்டிக்கோ மோதிக்கோ': தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவதால் படாாதபாடு
தேர்முட்டி பஸ் நிறுத்தத்தில் 'முட்டிக்கோ மோதிக்கோ': தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவதால் படாாதபாடு
ADDED : ஆக 04, 2024 11:07 PM

உடைந்த சிலாப்
கோவை மாநகராட்சி, 41வது வார்டுக்குட்பட்ட, கருப்பராயன் கோவில் பகுதியில், சாக்கடை கால்வாயின் சிலாப் உடைந்த நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. நடந்து செல்வோர், விழுவதற்கும் வாய்ப்புள்ளது. விரைந்து, சிலாப்பை சரிசெய்ய வேண்டும்.
- தமிழ்ரவி, 41வது வார்டு.
வீணாகும் குடிநீர்
வெள்ளக்கிணறு, உழைப்பாளர் வீதி, ரயில்வே கேட்டிலிருந்து உருமாண்டம்பாளையம் செல்லும் வழியில், தனியார் கம்பெனி முன் அத்திக்கடவு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக, 24 மணி நேரமும் சாலையில், குடிநீர் வீணாகி வருகிறது.
- குமார் கணேசன், வெள்ளக்கிணறு.
குவியும் குப்பையால் மக்கள் அவதி
சுந்தராபுரம், 97வது வார்டு, பேஸ் -1, வி.ஐ.பி., காலனி பகுதியில், காலியிடத்தில் குடியிருப்புவாசிகள் சிலர் மற்றும் அருகிலுள்ள தொழிற்சாலைகளிலிருந்து, தொடர்ந்து குப்பையை கொட்டுகின்றனர். அதிகளவு குவியும் குப்பையால், குடியிருப்பு பகுதியில், சுகாதாரமற்ற சூழல்நிலவுகிறது.
- இளங்கோ, சுந்தராபுரம்.
சேறும், சகதியுமான ரோடு
தடாகம் ரோடு, 33வது வார்டு, சிவாஜி காலனியில், கனரா வங்கி அருகே, சீரமைப்பு பணிக்காக சாலை தோண்டப்பட்டது. பணிகள் முடிந்த பின், தார் ஊற்றி சாலையை சீரமைக்கவில்லை. மண்ணாக இருக்கும் சாலை மழைநீரில் சேறும், சகதியுமாகிறது. பாதசாரிகள், வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
- பிரனேஷ்,சிவாஜி காலனி.
வழியை மறைத்து பார்க்கிங்
டவுன்ஹால், தேர்முட்டி பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிற்க முடியாத வகையில், பைக்குகளை வாகனஓட்டிகள் நிறுத்துகின்றனர். நிழற்கூடைக்கு அருகே கூட செல்ல முடியாத அளவிற்கு, வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் சாலையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
- காவியா, டவுன்ஹால்.
வேகத்தடை வேண்டும்
வடவள்ளி, லட்சுமி நகர் ஆர்ச் முன் உள்ள வளைவு ரோட்டில் அடிக்கடி சிறிய, சிறிய விபத்து நடக்கிறது. அதிக பள்ளிகள் நிறைந்த பகுதி என்பதால் மாணவர்கள் காலை, மாலை வேளையில் மிகுந்த சிரமப்படுகின்றனர். அதிவேக வாகனங்களை கட்டுப்படுத்தவும், விபத்துகளை தடுக்கவும் இப்பகுதியில், வேகத்தடை ஏற்படுத்த வேண்டும்.
- வேல்ராஜ், வடவள்ளி.
விஷ உயிரினங்களுக்கு கூடாரம்; அச்சத்தில் மக்கள்
வடவள்ளி, இடையர்பாளையம் ரோடு, 36வது வார்டு, சூப்பர் கார்டன் அவென்யூவில் குடியிருப்புகளுக்கு நடுவே, காலியிடத்தில் கட்டடக்கழிவு கொட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடக் குவியலில், பாம்பு, தேள் போன்ற உயிரினங்கள் தங்குவதற்கும், வீட்டிற்குள் வருவதற்கும் வாய்ப்புள்ளது.
- சத்தியபாமா, வடவள்ளி.
தவிக்கும் பயணிகள்
பேரூர் மெயின் ரோடு, செல்வபுரம், ஆர்.எம்.சி.எச்., மருத்துவமனை அருகே பேருந்து நிறுத்தத்தில், பயணியர் நிழற்கூடை அமைக்க, பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கையில்லை. குழந்தைகள், முதியவர்கள் உட்பட பயணிகள் வெயில், மழையில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
- ஜெயபால், செல்வபுரம்.
சேதமடைந்த சாலை
கோவை மாநகராட்சி, 34வது வார்டு, ராமலட்சுமி நகர், அனெக்ஸ் வீதியில், 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சாலை, மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. மழை சமயங்களில், குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதுடன், சேறாக மாறிவிடுகிறது. வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்வோரும் வழுக்கி விழுகின்றனர்.
- ஆலசுந்தரம், ராமலட்சுமிநகர்.
சாக்கடை நடுவே தண்ணீர் குழாய்
கோவை மாநகராட்சி, 83வது வார்டு, தண்டுமாரியம்மன் கோவில், மாநகராட்சி திருமண மண்டபம் பின்புறம், சாக்கடை கால்வாய் நடுவே உப்பு தண்ணீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், கழிவுநீர் தேங்கி, கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகளவில் உள்ளது. தண்ணீரில் கழிவுநீர் கலக்கும் அபாயமும் உள்ளது.
- நாகராஜன், 83வது வார்டு.
இடிந்த கால்வாய்
பொம்மணாம்பாளையம், 38வது வார்டு, மாரியம்மன் கோவில், தொண்டாமுத்துார் ரோடு சந்திப்பில் சாக்கடை கால்வாய் இடிந்துள்ளது. இதனால், இரவு நேரங்களில் குழி தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். குடிநீரில் சாக்கடை கலக்கும் அபாயமும் உள்ளது.
- சண்முகம், பொம்மணாம்பாளையம்.
தெருவிளக்கு பழுது
கணபதி, 20வது வார்டு, கே.கே.நகர், 'எஸ்.பி., - 54, பி- 35' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த 15 நாட்களாக தெரு விளக்கு எரியவில்லை. பலமுறை புகார் குறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழை சமயங்களில், இரவு 7:00 மணிக்கு மேல், வெளியில் செல்லவே முடியவில்லை.
- தேவராஜ், கணபதி.