/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாச்சியார் வித்யாலயம் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி
/
நாச்சியார் வித்யாலயம் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி
நாச்சியார் வித்யாலயம் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி
நாச்சியார் வித்யாலயம் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 09, 2024 04:49 AM

பொள்ளாச்சி, : பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளி நாச்சியார் வித்யாலயம் பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில், தேவி லலித்தா - 594 மதிப்பெண்ணுடன் முதலிடமும், ஸ்ரீ நிதின் - 593 இரண்டாம் இடமும், தர்ஷனா - 588 மூன்றாம் இடமும், மது ஸ்ரீ - 582 நான்காம் இடமும், திலோத்தமா - 570 ஐந்தாம் இடமும் பிடித்தனர்.
இதில், தேவி லலித்தா மற்றும் ஸ்ரீ நிதின் ஆகியோர் கோவை வருவாய் மாவட்ட அளவில் இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்தனர்.
நாச்சியார் பள்ளி கடந்த 12 ஆண்டுகளாக, பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. வெற்றி பெற்ற மாணவர்கள் கூறுகையில், 'பிளஸ் 2 பொதுத்தேர்வில் வெற்றி பெற ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உறுதுணையாக இருந்தனர். தேர்வில் அதிக மதிப்பெண் பெற பள்ளி நிர்வாகம் ஊக்கம் அளித்தது, தொடர் பயற்சி அளித்தது,' என்றனர்.
மாணவர்களை, பள்ளி நிறுவனர் சின்னசாமி, தாளாளர் மணி சின்னச்சாமி, முதல்வர் விஜயலட்சுமி நாச்சியார் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.