/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நாம்' விவசாயிகள் இயக்கம் தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஆதரவு; கோவையில் நடந்த தேசிய செயற்குழுவில் முடிவு
/
'நாம்' விவசாயிகள் இயக்கம் தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஆதரவு; கோவையில் நடந்த தேசிய செயற்குழுவில் முடிவு
'நாம்' விவசாயிகள் இயக்கம் தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஆதரவு; கோவையில் நடந்த தேசிய செயற்குழுவில் முடிவு
'நாம்' விவசாயிகள் இயக்கம் தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஆதரவு; கோவையில் நடந்த தேசிய செயற்குழுவில் முடிவு
ADDED : ஏப் 07, 2024 01:07 AM

கோவை;லோக்சபா தேர்தலில், 'நாம்' தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம், பா.ஜ.,வை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.கோவையில், 'நாம்' தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தின், மாநில செயற்குழு கூட்டம் ஆர்.வி.,ஓட்டலில் நேற்று நடந்தது.இதில், 'நாம்' அமைப்பின் மாநில தலைவர் பிரபுராஜா கூறியதாவது:தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, விவசாயிகளின் எந்த கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை. இதனால் தென்னை விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளிடம் இருந்து தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்து, எண்ணெய் ஆக மாற்றி, ரேஷன் கடைகளில் வினியோகம் செய்ய வேண்டும் என்பது, தென்னை விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை. அதை நிறைவேற்றவில்லை.தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்கவும், கள்ளை மதிப்பு கூட்டும் பொருட்களாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யவும், அனுமதிக்க வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டது. அதையும் தி.மு.க., அரசு அனுமதிக்கவில்லை. விவசாயிகளில் சார்பில் வைக்கப்பட்ட, எந்த கோரிக்கையையும் தமிழக அரசு நிறைவேற்றவில்லை. தி.மு.க., அரசால் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை. அதனால் இந்த தேர்தலில், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை, நாங்கள் ஆதரிக்கப்போவதில்லை. கள் இறக்க அனுமதிப்பது, உள்ளிட்ட எங்கள் பல கோரிக்கைகளை, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை நிறைவேற்றித் தருவதாக, உறுதி அளித்துள்ளார்.
அதனால் இந்த தேர்தலில், பா.ஜ., வை ஆதரிக்க, 'நாம்' இயக்க மாநில செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.,வுடன் இணைந்து, தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க இருக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார். 'நாம்' இயக்கத்தின், மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன், கொள்கை பரப்பு செயலாளர் குருசாமி, அமைப்பு செயலாளர் ராஜேந்திரன், துணைத்தலைவர்கள் நரேந்திரன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விவசாயிகளில் சார்பில் வைக்கப்பட்ட, எந்த கோரிக்கையையும் தமிழக அரசு நிறைவேற்றவில்லை. தி.மு.க., அரசால் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை. அதனால் இந்த தேர்தலில், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை, நாங்கள் ஆதரிக்கப்போவதில்லை.

