/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய வில்வித்தை போட்டி; கோவை மாணவி தேர்வு
/
தேசிய வில்வித்தை போட்டி; கோவை மாணவி தேர்வு
ADDED : ஆக 01, 2024 01:40 AM
கோவை : தேசிய அளவிலான வில்வித்தை போட்டிக்கு கோவை மாணவி தேர்வானார்.
தமிழ்நாடு வில்வித்தை அசோசியேஷன் சார்பில், 17வது மாநில அளவிலான மினி சப்-ஜூனியர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி சென்னை ஸ்ரீராம் இன்ஜி., கல்லுாரியில் இரண்டு நாட்கள் நடந்தது.
10, 13, 15 வயது பிரிவினர்களுக்கு இடையே நடந்த போட்டியில் கோவையை சேர்ந்த, 14 வயது மாணவி கண்மணி, 15 வயது பிரிவில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்தார்.
இதன் வாயிலாக, அவர் தேசிய அளவிலான வில்வித்தை போட்டிக்கு தகுதி பெற்றார். அவர் அடுத்த மாதம் விஜயவாடாவில் நடக்கும், தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.
இதையடுத்து, கண்மணிக்கு சர்வதேச அளவி லான போட்டிகளில் பங்கேற்கும் வகையில், பயிற்சிகளை மேற்கொள்ள ரூ.2.08 லட்சம் மதிப்பில் வில்லித்தை உபகரணங்களை, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையினர் வழங்கினர்.