/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : ஆக 10, 2024 03:06 AM

வால்பாறை;தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் சார்பில், கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வால்பாறையில், தென்மேற்குப்பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில், வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இக்குழுவின் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். தாசில்தார்(பொ) வேல்முருகன் தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் இன்ஸ்பெக்டர் தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில்,மழைக்காலத்தில் ஆபத்தில் சிக்கியவர்களை எப்படி பாதுகாப்பாக அழைத்து வருவது, மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை, எப்படி காப்பாற்றுவது, திடீர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டவர்கள், காயம் பட்டவர்களுக்கு எப்படி முதலுதவி அளிப்பது என்பது குறித்து மாணவர்கள் மத்தியில் மீட்பு படை வீரர்கள் செயல்விளக்கம் காண்பித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லுாரி நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள் பெரியசாமி, உமாமகேஸ்வரி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.