/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய பேரிடர் மீட்புக்குழு; பள்ளிகளில் விழிப்புணர்வு
/
தேசிய பேரிடர் மீட்புக்குழு; பள்ளிகளில் விழிப்புணர்வு
தேசிய பேரிடர் மீட்புக்குழு; பள்ளிகளில் விழிப்புணர்வு
தேசிய பேரிடர் மீட்புக்குழு; பள்ளிகளில் விழிப்புணர்வு
ADDED : ஆக 29, 2024 12:09 AM

வால்பாறை : வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தாசில்தார் சிவக்குமார் துவக்கி வைத்தார். இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக, திருஇருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவின் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமை வகித்தார். தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் கமேண்டர் தினேஷ் துவக்கி வைத்தார்.
பேரிடர் என்பது இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று மனிதர்களாலும், இரண்டாவது இயற்கையாலும் வரக் கூடிய அழிவாகும். இந்த இரண்டையும் எப்படி எதிர்கொள்வது என்பது தான் மீட்பு குழுவின் பணி. முதலில் இயற்கை சீற்றத்தின் போது, பாதிக்கப்பட்டவர்களை எப்படி மீட்பது, அவர்களுக்கு எந்த மாதிரியான முதலுதவி செய்வது என்பதை மாணவர்களாகிய நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம் என, விழிப்புர்ணவு ஏற்படுத்தப்பட்டது.
கனமழையில் சிக்கியவர்களை எப்படி பாதுகாப்பாக அழைத்து வருவது, அவர்களுக்கு எந்த மாதிரியான முதலுதவி சிகிச்சை அளிப்பது, மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது, முதலுதவி அளிப்பது குறித்தும் மாணவர்களுக்கு செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது.