/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய வலுதுாக்கும் போட்டிகோவை மாணவி 'பவர்'
/
தேசிய வலுதுாக்கும் போட்டிகோவை மாணவி 'பவர்'
ADDED : மே 24, 2024 01:15 AM
கோவை;அகில இந்திய பல்கலை அளவிலான வலுதுாக்குதல் போட்டியில் கோவை கல்லுாரி மாணவி தங்கம் வென்று அசத்தினார்.
பல்கலை மாணவர்களுக்கான அகில இந்திய பல்கலை வலுதுாக்குதல் போட்டி சென்னை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலையில் மே 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடக்கிறது.
இப்போட்டியில் மண்டல அளவில் நடந்த பல்கலைகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர் பங்கேற்கின்றனர். இதில் தென்மண்டல அளவிலான இடையேயான போட்டியில் வெற்றி பெற்று பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி மாணவி நிஷாந்தி பாரதியார் பல்கலை சார்பில் 84+ கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டார்.
ஸ்குவாட் பிரிவில் 267.5 கிலோ, பெஞ்ச் பிரஸ் பிரிவில் 130கிலோ மற்றும் டெட் லிப்ட் பிரிவில் 215கிலோ என மொத்தம் 612.5 கிலோ எடையை துாக்கி தங்கப்பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற மாணவியை கல்லுாரி நிர்வாகிகள் மற்றும் உடற்கல்வித்துறையினர் பாராட்டினர்.