/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜி.கே.என்.எம்., சார்பில் தேசிய இருதய பயிலரங்கம்
/
ஜி.கே.என்.எம்., சார்பில் தேசிய இருதய பயிலரங்கம்
ADDED : மே 29, 2024 12:40 AM

கோவை;ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் உள்ள, இருதய மயக்க மருந்து பிரிவு சார்பில், தேசிய அளவிலான, 'இன்ட்ரா ஆப்பரேட்டிவ் எக்கோகார்டியோகிராபி' பயிலரங்கம், மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
நாடு முழுவதும் உள்ள இருதய மயக்கவியல் நிபுணர்கள், இருதய நோய் மருத்துவ நிபுணர்கள் மற்றும் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றனர். இத்துறையில் முன்னோடிகளாக திகழும், அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சந்திரசேகரன், பெங்களூருவை சேர்ந்த டாக்டர் முரளிதர் காஞ்சி, சென்னையைச் சேர்ந்த டாக்டர் குமார், மும்பையைச் சேர்ந்த டாக்டர் தீபக் போர்டே ஆகியோர், பயிலரங்கினை வழிநடத்தினர்.
அதிநவீன, 3டி டிரான்ஸ்ஸோபேஜியல் எக்கோ ஆய்வுகள் உடன், அதிநவீன எக்கோ கார்டியோகிராபி இயந்திரங்கள், நோயாளிகள் மற்றும் உபகரணங்களைக் கையாளும் நிபுணர்கள், மூன்று சவாலான இருதய அறுவை சிகிச்சைகளை, அன்றைய தினம் மேற்கொண்டனர்.
அறுவை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய டிரான்ஸ்ஸோபேஜியல் எக்கோ தொடர்பான விபரங்கள் விவாதிக்கப்பட்டன.பார்வையாளர்கள் அரங்கத்தில் இருந்து, ஆபரேஷன் தியேட்டரில் உள்ள நிபுணர்களுடன் உரையாடக்கூடிய நேரடிப் பயிலரங்கமாக இது இருந்தது. சந்தேகங்களை மருத்துவ நிபுணர்கள் உடனுக்குடன் தீர்த்து வைத்தனர்.