/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்துஸ்தான் இன்ஜி., கல்லுாரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்
/
இந்துஸ்தான் இன்ஜி., கல்லுாரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்
இந்துஸ்தான் இன்ஜி., கல்லுாரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்
இந்துஸ்தான் இன்ஜி., கல்லுாரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்
ADDED : மார் 29, 2024 12:44 AM

கோவை:இந்துஸ்தான் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியின் மின் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில், தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் நேற்று நடந்தது.
மின் மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர் ஆனந்தமூர்த்தி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ஜெயா வாழ்த்துரை வழங்கினார். கரும்பு வளர்ப்பு நிறுவன (இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்), கோவை முதன்மை விஞ்ஞானி புத்திர பிரதாப் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ''மாணவர்கள் தங்களது கல்விப் பயணத்தில், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகளை யு.ஜி.சி., கேர் ஸ் கோப்பஸ் போன்ற அங்கீகரிக்கப்பட்ட நாளிதழ்களில் வெளியிட வேண்டும்,'' என்றார்.
கருத்தரங்கில், 100க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில் இருந்து, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கம், கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்லுாரியின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி, நிர்வாக செயலாளர் பிரியா, முதன்மை செயல் அதிகாரி கருணாகரன் பங்கேற்றனர்.

