/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய விளையாட்டு தினம் கல்லுாரியில் போட்டிகள்
/
தேசிய விளையாட்டு தினம் கல்லுாரியில் போட்டிகள்
ADDED : ஆக 31, 2024 02:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை:தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, வால்பாறை அரசு கல்லுாரியில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
வால்பாறை தேசிய மாணவர் படை சார்பில், தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. விழாவை கல்லுாரி முதல்வர் சிவசுப்பிரமணியம் துவக்கி வைத்தார். தேசிய மாணவர் படை அலுவலர் லெப்டினன்ட் முரளிராஜ் வரவேற்றார்.
விழாவில், ஓட்டப்பந்தயம், கை பந்து, எறிபந்து போன்ற விளையாட்டு போட்டிகள் கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை மாணவர்கள், பேராசிரியர்கள் செய்திருந்தனர்.