/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண்டல அறிவியல் மையத்தில் தேசிய தொழில்நுட்ப தின நிகழ்வு
/
மண்டல அறிவியல் மையத்தில் தேசிய தொழில்நுட்ப தின நிகழ்வு
மண்டல அறிவியல் மையத்தில் தேசிய தொழில்நுட்ப தின நிகழ்வு
மண்டல அறிவியல் மையத்தில் தேசிய தொழில்நுட்ப தின நிகழ்வு
ADDED : மே 13, 2024 12:26 AM
கோவை;கோவை மண்டல அறிவியல் மையத்தில், தேசிய தொழில்நுட்ப தின கருத்தரங்கம் நடந்தது.
இதில், ஸ்டாட் அப் நிறுவனங்களுக்கான புதிய தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில், கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, பயோ மெடிக்கல் துறைத்தலைவர் கணேஷ்குமார் விளக்கமளித்தார்.
தற்போதைய தொழில்நுட்ப உலகில், கல்லுாரி மாணவர்களே எளிதாக ஸ்டாட் அப் நிறுவனங்களை தொடங்கி, வெற்றி பெறமுடியும் என வல்லுநர்கள் விளக்கமளித்தனர்.
இதில், செயற்கை நுண்ணறிவு, தரவுபகுப்பாய்வு, பிளாக்செயின், விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்கள் குறித்தும், அதனால் உருவாகும் தொழில் வாய்ப்புகள் குறித்தும், கருத்தரங்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்வில், கோவை மண்டல அறிவியல் மைய பொறுப்பாளர் வள்ளி, சக அலுவலர்கள் மற்றும் கே.பி.ஆர்.,கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.