/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய டென்னிஸ் போட்டி; திறமையை காட்டிய வீரர்கள்
/
தேசிய டென்னிஸ் போட்டி; திறமையை காட்டிய வீரர்கள்
ADDED : ஆக 01, 2024 01:46 AM

கோவை : தேசிய அளவிலான டென்னிஸ் போட்டியில், வீரர்கள் தங்களின் முழுத்திறமையையும் வெளிப்படுத்தினர்.
காளப்பட்டி சாலையில் உள்ள லிவோ ஸ்போர்ட்ஸ் சார்பில், அகில இந்திய அளவிலான ஆண்கள் ரேங்கிங் டென்னிஸ் போட்டி, ஜூலை, 29ம் தேதி துவங்கி ஆக., 3ம் தேதி வரை நடக்கிறது.
இப்போட்டியில் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 120க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஆண்களுக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. வெற்றி பெறும் வீரர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன. நேற்று நடந்த முதல் சுற்றுப்போட்டியில், தமிழகத்தின் ரஞ்சித் 2 - 0 என்ற செட் கணக்கில் கர்நாடகா வீரர் பிரீதம் கணேஷை வீழ்த்தினார்.