/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய வூசு போட்டி; கோவை மாணவிக்கு தங்கம்
/
தேசிய வூசு போட்டி; கோவை மாணவிக்கு தங்கம்
ADDED : ஆக 08, 2024 10:58 PM

கோவை;தேசிய அளவிலான வூசு தற்காப்பு கலை போட்டியில் கோவை மாணவி தங்கப்பதக்கம் வென்றார்.
கோவை வட்டமலை பாளையம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் மாணவி செர்லினா, 2021- 2022ம் ஆண்டுக்கான தேசிய அளவிலான 'வூசு' எனும் தற்காப்பு கலை போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றார். அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது.
விழாவில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ரூ.1.5 லட்சம் காசோலையை செர்லினாவுக்கு வழங்கினார். இதை தொடர்ந்து கோவை அரசூர் கே.பி.ஆர்., கல்லுாரியில் நடந்த, 2024 - 2025ம் ஆண்டுக்கான தேசிய அளவிலான வூசு போட்டியில் செர்லினா பங்கு பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனைப்படைத்தார்.
மாணவியை பள்ளி நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணஸ்வாமி பாராட்டி, ஊக்கப்படுத்தினார். பள்ளி முதல்வர் சாரதா வாழ்த்து தெரிவித்தார்.