ADDED : ஆக 28, 2024 11:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடவள்ளி: 'தினமலர்' புகார் பெட்டி செய்தி எதிரொலியாக, மருதமலை சாலையில் இருந்த குழிகளை, நெடுஞ்சாலைத்துறையினர் 'பேட்ச் ஒர்க்' செய்தனர்.
கோவை மாநகரின் முக்கிய சாலைகளில் ஒன்றாக, மருதமலை சாலை உள்ளது. இப்பகுதியில், பாரதியார் பல்கலை., அண்ணா பல்கலை., கோவை சட்டக் கல்லூரி, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், தனியார் நிறுவனங்கள் என, ஏராளமாக உள்ளதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், மருதமலை சாலையில், நவாவூர், வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில், சாலை குண்டும் குழியுமாக இருந்தது. இதுகுறித்து, நமது நாளிதழ் 'இன்பாக்ஸ்' பகுதியில் படத்துடன் செய்தி வெளிவந்தது.
இதனையடுத்து, மாநில நெடுச்சாலைத்துறையினர், நேற்று மருதமலை சாலை, நவாவூர் பிரிவு, வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில், 'பேட்ச் ஒர்க்' செய்து, குழிகளை மூடினர்.