/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தீர்வு காண தேசிய அமைப்பு வேண்டும்: சத்குரு

ADDED : ஆக 18, 2024 12:55 AM
தொண்டாமுத்தூர்:கோல்கட்டாவில் உள்ள மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் டாக்டர், வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இந்த நாட்டில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும், மிக கொடூரமான குற்றங்களுக்கு தீர்வு காண, மாநில அமைப்புகளை தாண்டி, ஒரு தேசிய அமைப்பு உருவாக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஏனென்றால், இப்போது நடந்து கொண்டிருப்பது, நம் நாட்டையே கேலிக்கு உள்ளாக்கும் இரக்கமற்ற செயலாகும். பாரதத்தில் துடிக்கும் இதயத்துடன் இருக்கும் குடிமக்கள், எவரும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. இக்கணமே செயல் பட வேண்டும்.
இவ்வாறு, சத்குரு பதிவிட்டுள்ளார்.