/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெகமம் அரசுப்பள்ளி மாணவன் சாதனை
/
நெகமம் அரசுப்பள்ளி மாணவன் சாதனை
ADDED : மே 10, 2024 11:18 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, நெகமம் அரசுப்பள்ளி மாணவன், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 497 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
பொள்ளாச்சி அருகே, நெகமம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 15 மாணவர்கள் எழுதினர். அதில், 14 மாணவர்கள் வெற்றி பெற்று, பள்ளியானது, 93.33 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளி மாணவர் சந்தோஷ், 500 மதிப்பெண்களுக்கு, 497 மதிப்பெண் பெற்றார்; இவர், ஆங்கிலம், கணிதம் பாடங்களில், 100க்கு 100 மதிப்பெண்ணும், மற்ற பாடங்களில், 99 மதிப்பெண்ணும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும், மாநில அளவில், மூன்றாம் இடம் பிடித்துள்ளார். இது தவிர, மூன்று பேர், 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவரை, பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் பாராட்டினர். கிராம புறத்திலுள்ள அரசு பள்ளி மாணவன், மாநில அளவில் மதிப்பெண் பெற்றதற்கு, கல்வியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மாணவர்கள் கூறுகையில், 'பள்ளி ஆசிரியர்கள் வழங்கிய பயற்சிகளால், அதிக மதிப்பெண் பெற முடிந்தது.
முந்தைய பொதுத்தேர்வு வினாத்தாள்கள், மாதிரி வினாத்தாள்களை கொண்டு திரும்ப திரும்ப தேர்வு எழுதி பயற்சி பெற்றது கைகொடுத்தது,' என்றனர்.