/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இயற்கை சூழலில் நேரு சர்வதேச பள்ளி
/
இயற்கை சூழலில் நேரு சர்வதேச பள்ளி
ADDED : பிப் 27, 2025 09:21 PM
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், எழில் கொஞ்சும் இயற்கை சூழலில் நேரு கல்விக்குழுமத்தின் அங்கமான, நேரு சர்வதேச பள்ளி செயல்பட்டு வருகிறது.
சுற்றுப்புற கட்டமைப்பு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தடையில்லா மின்சாரம், ஏ.ஆர்., வி.ஆர்., ஆய்வகங்கள் இணையவசதியுடன் விரிவுபடுத்தப்பட்ட நுாலக வசதி என அனைத்து வசதிகளும் இங்கு உள்ளன.
சி.சி.டி.வி., பொருத்தப்பட்ட பள்ளி வாகன வசதி கோவை நகரில் பல்வேறு பகுதிகளில் வழங்கப்படுகிறது. அனைத்து வகை போட்டித்தேர்வுகளுக்கும், ஏ.சி.ஆர்., ஒலிபியாட் போன்ற தேர்வுகளுக்கும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கு நீட்., ஜே.இ.இ., போன்ற தேர்வுகளுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. யோகா, சிலம்பம், கராத்தே, இசை, நடனம், துப்பாக்கி சுடுதல், வில்வித்தை, கால்பந்து, தடகளம், போன்ற ் வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. என்.சி.சி., என்.எஸ்.எஸ்., இளைநிலை பிரிவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கல்வியுடன் சிறந்த ஒழுக்கம், பண்புடன் கூடிய மாணவர்களை சமுதாயத்திற்கு அளிக்கும் நோக்கில் பள்ளி செயல்பாடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

