தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நெட்வொர்க் பிரச்னைக்கு விரைவில் தீர்வு மலைப்பகுதி ரேஷன்கடைகளில் சிக்கல் இருக்காது

நெட்வொர்க் பிரச்னைக்கு விரைவில் தீர்வு மலைப்பகுதி ரேஷன்கடைகளில் சிக்கல் இருக்காது

நெட்வொர்க் பிரச்னைக்கு விரைவில் தீர்வு மலைப்பகுதி ரேஷன்கடைகளில் சிக்கல் இருக்காது


ADDED : மே 06, 2026 05:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2026 05:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: மலைப்பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் மூலமான கைரேகை பதிவு முறையைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 1,401 ரேஷன் கடைகள் உள்ளன. அரிசி அட்டை, அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகள், சர்க்கரை அட்டை என மொத்தம் 13.19 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் பொருட்கள் ஏதும் வாங்காத பண்டமில்லா அட்டை மட்டும் 10 ஆயிரத்து 517.

தற்போது ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க பயோமெட்ரிக் கைரேகை  கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ், வெளியூர் அட்டைதாரர்களும் கைரேகை பதிவு மூலம் எங்கு வேண்டுமானாலும் பொருட்கள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நகர், புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கைரேகை சரிபார்க்கும் இயந்திரங்கள் உள்ளன.

ஆனால், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், வால்பாறை, ஆணைமலை உள்ளிட்ட இடங்களில் உள்ள சில மலைப்பகுதிகளில் போதிய ‘நெட்வொர்க்’ பிரச்னைகளால், அங்கு கைரேகை பதிவு செய்யப்படுவதில்லை. நேரடியாக பொருட்கள் வழங்கப்படுகின்றன.

மலைப்பகுதிகளிலும் 100 சதவீதம் ஆன்லைன் முறையை கொண்டு வர, பிரச்னை உள்ள இடங்களில் ‘சிக்னல்’ தரத்தை மேம்படுத்தி சோதனைகள் நடத்தப்பட்டன.

அதிகாரிகள் கூறுகையில், ‘நெட்வொர்க் சிக்னல் குறைவாக உள்ள மலைப்பகுதிகளில் கைரேகை பதிவை சோதனை செய்து பார்த்தோம். பதிவின் போது சில இடங்களில் சிக்னல் துண்டிக்கப்பட்டது.

இதற்காக கூடுதல் தொழில்நுட்ப முயற்சிகளை எடுத்து வருகிறோம். விரைவில் சிக்னல் பூஸ்டர்கள் அல்லது மாற்று வழிகள் மூலம் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் முறை நடைமுறைக்கு வரும்’ என்றனர்.

காரமடை, பெரியநாயக்கன்பாளையம், வால்பாறை, ஆணைமலை உள்ளிட்ட இடங்களில் உள்ள சில மலைப்பகுதிகளில் போதிய ‘நெட்வொர்க்’ பிரச்னைகளால், அங்கு கைரேகை பதிவு செய்யப்படுவதில்லை. நேரடியாக பொருட்கள் வழங்கப்படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us