/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.ஐ.ஐ., புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு
/
சி.ஐ.ஐ., புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு
ADDED : மார் 09, 2025 11:43 PM
கோவை; இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) கோவை பிரிவின், 2025-26ம் ஆண்டுக்கான தலைவராக, சல்சார் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் ராஜேஷ் துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார். வாக்கரூ நிறுவன நிர்வாக இயக்குநர் நவுஷத், துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சி.ஐ.ஐ.,யின் ஓர் அங்கமாக, இந்திய மகளிர் வலையமைவு (இந்தியன் வுமன் நெட்வொர்க் -ஐ.டபிள்யூ.என்.,) செயல்பட்டு வருகிறது.
கோவை மண்டல சி.ஐ.ஐ., ஆண்டு விழாவையொட்டி, ஐ.டபிள்யூ.என்.,கோவை மண்டல கிளை புதிதாக துவக்கப்பட்டது.
ஐ.டபிள்யூ.என்., தென்பிராந்திய துணைத் தலைவர் கவுரி கைலாசம், சி.ஐ. ஐ., தமிழ்நாடு தலைவர் ஸ்ரீவத்ஸ் ராம், சி.ஐ.ஐ., ஐ.டபிள்யூ.என்., தமிழக முன்னாள் தலைவர் மலர்விழி, சி.ஐ.ஐ., தென்பிராந்திய தலைவர் நந்தினி, ஐ.டபிள்யூ.என்., முன்னாள் தலைவர் கிருத்திகா சிவகுமார், துணைத் தலைவர் அமுதவல்லி ரங்கநாதன், கோவை பிரிவு கன்வீனர் கெசிகா ஜெயபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.