/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்துக்கு புதிய இயக்குனர் பொறுப்பேற்பு
/
கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்துக்கு புதிய இயக்குனர் பொறுப்பேற்பு
கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்துக்கு புதிய இயக்குனர் பொறுப்பேற்பு
கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்துக்கு புதிய இயக்குனர் பொறுப்பேற்பு
ADDED : ஆக 03, 2024 10:02 PM

கோவை : கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் புதிய இயக்குனராக, விஞ் ஞானி கோவிந்தராஜ் பொறுப்பேற்றுக்கொண்டார்.
டில்லி வேளாண் விஞ்ஞானி தேர்வாணையத்தின் பரிந்துரைப்படி, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக, கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தின், பயிர் மேம்பாட்டுத்துறை தலைவராக பணிபுரிந்த கோவிந்தராஜ், தற்போது கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவன இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.
பயிர் ரகங்களை உருவாக்குதல், எரிசக்தி ரகங்களை உருவாக்குதல், மரபியல் இனங்களை சேகரித்தல் மற்றும் அவற்றை அடிப்படையாகபயன்படுத்தி, புதிய கரும்பு ரகங்களை உருவாக்குதல், இவற்றில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர். இவற்றில் கோ -0232 மற்றும் கோ -0233 கரும்பு ரகங்கள், வட மாநிலங்களில் பிரபலம்.
இவரால் உருவாக்கப்பட்ட, கோ -09004 கரும்பு ரகம், தமிழகம், கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களில், பயிரிடப்பட்டு வருகிறது. இவர் உருவாக்கிய எஸ்.பி.ஐ.இ.சி., -14006 என்ற எரிசக்தி கரும்பு ரகம், சர்வதேச அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பிஜி நாட்டின் கரும்பு ஆலோசகராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டு, அந்நாட்டின் தேசிய கரும்பு ரகங்களை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.