/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எமதர்மர் கோவிலில் அமாவாசை பூஜை
/
எமதர்மர் கோவிலில் அமாவாசை பூஜை
ADDED : செப் 03, 2024 01:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்;சிறுமுகை அருகே சென்னம்பாளையத்தில், எமதர்மர் கோவில் உள்ளது. இக்கோவிலில், அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. காலை, 8:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து எமதர்மருக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு அலங்கார பூஜை செய்தனர்.
கோவில் பூசாரிகள் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பூஜையில் பங்கேற்ற ஏராளமான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.