ADDED : ஜூலை 06, 2024 02:22 AM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி அருகே, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அம்மன், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள், வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர்.
சூலக்கல் மாரியம்மன் கோவில், டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவில், பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவில், ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் அமாவாசை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
உடுமலை: ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, உடுமலை சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் சோழீஸ்வரர் அருள்பாலித்தார்.
திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், உடுமலை மாரியம்மன் கோவில், பிரசன்ன விநாயகர் கோவில், கடத்துார் அர்ச்சுனேஸ்வரர் கோவில், சோமவாரப்பட்டி அமரபுயங்கீஸ்வரர் கோவில், கொழுமம் காசி விஸ்வநாதர் கோவில், தாண்டேஸ்வரர் கோவில், உடுமலை சித்தாண்டீஸ்வரர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.