/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கம்பில் அதிக சாகுபடி பெற புதிய தொழில்நுட்பம் வேளாண் செய்திகள்
/
கம்பில் அதிக சாகுபடி பெற புதிய தொழில்நுட்பம் வேளாண் செய்திகள்
கம்பில் அதிக சாகுபடி பெற புதிய தொழில்நுட்பம் வேளாண் செய்திகள்
கம்பில் அதிக சாகுபடி பெற புதிய தொழில்நுட்பம் வேளாண் செய்திகள்
ADDED : மார் 29, 2024 12:32 AM
அன்னூர்;கம்பில் அதிக சாகுபடி பெற புதிய தொழில்நுட்பத்தை வேளாண் துறை தெரிவித்துள்ளது.
தற்போது தமிழகத்தில் முதல் பருவ சாகுபடி அறுவடை முடிந்துள்ளது. இரண்டாம் பருவமான கோடையில் குறைந்த காலம் மற்றும் குறைந்த நீர் தேவை உள்ள பயிர் வகைகள், எண்ணெய் வித்துக்கள், தானியங்கள் சாகுபடி செய்ய ஏற்ற தருணம்.
இந்த தருணத்தில் உயர் விளைச்சல் ரகமான கோ பத்து மற்றும் தனசக்தி கம்பு ரகங்களை சாகுபடி செய்யலாம். கோ 10 கம்பில் புரதச்சத்து 12 சதவீதம் உள்ளது. ஏக்கருக்கு இரண்டு கிலோ விதை தேவை.
தேவையான தொழு உரம் இட்டு, கடைசி உழவில், ஏக்கருக்கு 20 கிலோ யூரியா, 87 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 22 கிலோ பொட்டாஸ் ரகங்களை இடவேண்டும்.
கோடையில் நீர் சிக்கனம் செய்வதற்கு வசதியாக பாத்திகளில் விதைகளை ஊன்றலாம். ஒன்றரை அடி இடைவெளியில் பாத்திகள் அமைத்து அரை அடி இடைவெளியில் விதைப்பு செய்யலாம்.
இதனால் ஏக்கருக்கு 60 ஆயிரம் பயிர்கள் கிடைக்கும். 2 கிலோ விதையுடன் தலா 50 மில்லி அளவுக்கு அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா திரவ உரங்களை கலந்து விதைக்க வேண்டும். விதைத்த மூன்று நாட்களுக்குப் பிறகு களைகளை கட்டுப்படுத்த அட்ரஸின் 100 கிராம் ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
கோடையில் குருந்து ஈ தாக்குதலை தவிர்க்க ஏக்கருக்கு ஐந்து கருவாட்டு பொறிகளை வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். வேப்பங்கொட்டை சாறு தெளித்தும் கட்டுப்படுத்தலாம். தேவையான கம்பு கோ 10 ரகங்களை காரமடை வட்டார வேளாண் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண் உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு வேளாண் இணை இயக்குனர் பெருமாள்சாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

