/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய ஒன்றியங்கள் உருவாக்க வேண்டும்! பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
/
புதிய ஒன்றியங்கள் உருவாக்க வேண்டும்! பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
புதிய ஒன்றியங்கள் உருவாக்க வேண்டும்! பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
புதிய ஒன்றியங்கள் உருவாக்க வேண்டும்! பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : ஆக 23, 2024 12:57 AM

பொள்ளாச்சி;''ஊராட்சி ஒன்றியங்களில் சிறப்பு திட்டங்களை நிறைவேற்ற, தனி வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம், அதற்கான கட்டமைப்பு உருவாக்க வேண்டும்,'' என, தமிழ்நாடு ஊரகவளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் தெரிவித்தார்.
பொள்ளாச்சியில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின், கோவை மாவட்ட பொதுக்குழு மற்றும் முப்பெரும் விழா நடந்தது. மாவட்ட தலைவர் விஜய குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜென்கின்ஸ் முன்னிலை வகித்தார். மாநில இணைச் செயலாளர் சிக்கந்தர் பாஷா வரவேற்றார்.மாவட்ட பொருளாளர் ரமேஷ் நிதிநிலை அறிக்கை படித்தார்.
மாநில தலைவர் பாலசுப்ரமணியம் பேசியதாவது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், கலைஞரின் கனவு இல்லம், ஜல்ஜீவன் திட்டம்உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை, ஊராட்சி ஒன்றியங்களில் நிறைவேற்ற தனி வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம், அதற்கான புதிய கட்டமைப்பு உருவாக்க வேண்டும்.
நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாறும் போது, ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன. இதற்கு மாற்றாக புதிய ஊராட்சிகள் உருவாக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில், 12,575 கிராம ஊராட்சிகள், மாநகராட்சி, நகராட்சியுடன் இணையும் போது, பெரிய ஊராட்சிகள் இரண்டாக பிரிக்க வேண்டும். தமிழகத்தில் மொத்தம், 388 ஊராட்சி ஒன்றியங்கள் மட்டும் தான் உள்ளன. எனவே, புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றி தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட உள்ளது.
இவ்வாறு, பேசினார்.
கூட்டத்தில், அரசு பணியாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊரக வளர்ச்சி துறையில் பல்வேறு திட்டப்பணிகளில் உரிய காலக்கெடு அளிக்காமல் பணிகளை முடிக்க அவசரப்படுத்தும் நிலையை கைவிட வேண்டும். கோவை மாவட்டத்தில் கலைக்கப்பட்ட வால்பாறை ஊராட்சி ஒன்றியத்தை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில பொதுச்செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் செல்லப்பாண்டி, உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பேசினர்.