/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நியூஸ்கீம் ரோடு படுமோசம்; விபத்துக்குள்ளாகும் வாகன ஓட்டுநர்கள்
/
நியூஸ்கீம் ரோடு படுமோசம்; விபத்துக்குள்ளாகும் வாகன ஓட்டுநர்கள்
நியூஸ்கீம் ரோடு படுமோசம்; விபத்துக்குள்ளாகும் வாகன ஓட்டுநர்கள்
நியூஸ்கீம் ரோடு படுமோசம்; விபத்துக்குள்ளாகும் வாகன ஓட்டுநர்கள்
ADDED : பிப் 23, 2025 11:56 PM

மின்கம்பம் சேதம்
கிணத்துக்கடவு, பிளேக் மாரியம்மன் கோவில், குடியிருப்பு பகுதி அருகில் உள்ள, மின் கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளது. இந்த கம்பம் கீழே சாய்வதற்குள் மின்வாரியத்தினர் மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும்.
-- சரவணன், கிணத்துக்கடவு.
தெருவிளக்கு வசதியில்லை
கிணத்துக்கடவு, பெரியார்நகர் நான்காவது வீதியில் பாதி துாரத்துக்கு தெருவிளக்கு அமைக்கப்பட்டுள்ளது. மீதி தூரத்துக்கு தெருவிளக்கு வசதியில்லை. இதனால், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து இருக்கிறது. எனவே, இங்கு கூடுதல் மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.
-- ரமேஷ், கிணத்துக்கடவு.
சேறும் சகதியுமான ரோடு
பொள்ளாச்சி, 29வது வார்டு கோட்டூர் ரோடு அங்கன்வாடி மற்றும் நகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே உள்ள ரோட்டில், சாக்கடை நீர் வழிந்தோடுகிறது. இதன் மீது நகராட்சி நிர்வாகம் மண்ணை கொட்டி உள்ளது. இதில் சாக்கடை நீர் கலந்து சேறும், சகதியுமாக காணப்படுவதுடன், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதை நகராட்சி நிர்வாகம் விரைவில் சரி செய்ய வேண்டும்.
- ராஜ், பொள்ளாச்சி.
உடைந்த தடுப்பை மாற்றுங்க!
கிணத்துக்கடவு, புது பஸ் ஸ்டாண்டில் உடைந்த தடுப்புகள் (பேரிகார்டு) ரோட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்புகள் எப்போது வேண்டுமானாலும் காற்றுக்கு கீழே விழுவதற்கு வாய்ப்புள்ளது. வாகன ஓட்டுநர்கள் இதை கடக்கும் போது அச்சப்படுகின்றனர். எனவே, இந்த தடுப்புகளை மாற்றம் செய்ய வேண்டும்.
- ராமகிருஷ்ணன், கோவில்பாளையம்.
ரோடு சேதம்
பொள்ளாச்சி, நியூஸ்கீம் ரோட்டில் ஆங்காங்கே ரோடு சேதமடைந்துள்ளது. இணைப்பு ரோட்டில் வேகத்தடையும் சேதமடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் தடுமாறி செல்கின்றனர். எனவே, இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும்.
-- டேவிட், பொள்ளாச்சி.
மூடப்படுவது எப்போது?
உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே கழிவு நீர் ஓடை மூடப்படாமல் உள்ளது. இதனால், வாகனங்கள் செல்லும் போது விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த ஓடையை மூட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முருகன், உடுமலை.
போக்குவரத்து நெரிசல்
உடுமலை, சீனிவாசா வீதியில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டுள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்கள் அவ்வழியாக மாலை நேரங்களில் நடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.
- பாலாஜி, உடுமலை.
சுகாதாரம் பாதிப்பு
உடுமலை, நகராட்சி நிர்வாக அலுவலகம் எதிரில் குப்பைக்கழிவுகள் குடியிருப்புகளுக்கு அருகில் கொட்டப்படுகின்றன. குப்பைக்கழிவுகள் தொடர்ந்து குவிந்து கொண்டிருப்பதால் மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதி குடியிருப்புகளில் கொசுத் தொல்லையும் அதிகரிக்கிறது.
- சீனிவாசன், உடுமலை.
விதிமீறும் வாகனங்கள்
உடுமலை, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. பயணிகள் பஸ்சுக்கு வர முடியாமல் இருப்பதால் அவதிக்குள்ளாகின்றனர். ரோடு வரை வாகனங்கள் நிறுத்தப்படுவதால் மற்ற கனரக வாகனங்கள் செல்லும்போது நெரிசல் ஏற்படுகிறது.
- கனகரத்தினம், உடுமலை.
'லொள்' தொல்லை
கணக்கம்பாளையம், பி.வி.லே., - அவுட் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரிக்கிறது. இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்களை அவ்வழியாக செல்ல விடாமல் தெருநாய்கள் துரத்தி செல்கின்றன. வீடுகளை சுற்றி தொடர்ந்து அசுத்தம் செய்வதுடன் குழந்தைகளை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்கின்றன.
- செல்வகுமார், உடுமலை.
அகற்ற வேண்டும்
உடுமலை - பழநி ரோட்டில் நகராட்சி சார்பில், குப்பையை கொண்டு வந்து கொட்டி வைத்துள்ளனர். இதனால், அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வகுமார், உடுமலை.

