/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீலகிரி பா.ஜ., வேட்பாளர் முருகன் மனு தாக்கல்
/
நீலகிரி பா.ஜ., வேட்பாளர் முருகன் மனு தாக்கல்
ADDED : மார் 26, 2024 01:40 AM

ஊட்டி;நீலகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் முருகன் அவரது மனைவி சொத்து; கடன் விவரம்:
பா.ஜ., வேட்பாளர் முருகன், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம்; அவரது மனைவி கலையரசி, 72 ஆயிரம் ரூபாய் கை இருப்பு வைத்துள்ளனர்.
மேலும், டில்லியில் உள்ள கனரா வங்கியில், 61 ஆயிரத்து 694 ரூபாய் முருகன் பெயரில் 'டெபாசிட்' செய்யப்பட்டுள்ளது. மேலும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில், 22 லட்சத்து 44 ஆயிரத்து 829 ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
அவரது மனைவி கலையரசி பெயரில் சென்னையில் உள்ள கீழ்பாக்கம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளையில், 7 லட்சத்து, 98 ஆயிரத்து 515 டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டை இந்தியன் வங்கியில், 11 ஆயிரத்து 516 ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 'எல்ஐசி' மற்றும் தனியார் நிறுவனங்களில், 60 லட்சத்து 38 ஆயிரத்து 846 ரூபாய் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அவரது மனைவி கலையரசி பெயரில் 'எல்ஐசி' மற்றும் தனியார் நிறுவனங்களில், 46 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், முருகன் பெயரில், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு மாருதி சுசுகி ஸ்விப்ட் கார் உள்ளது.
அவரது மனைவி பெயரில், 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டர் உள்ளது. முருகன் பெயரில், 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான 240 கிராம் தங்க நகைகள் உள்ளது. அவரது மனைவி பெயரில், 33 லட்சம் ரூபாய் மதிப்பிலான 720 கிராம் தங்க நகைகள் உள்ளன.
முருகன் பெயரில், 1 கோடி 2 லட்சத்து 95 ஆயிரத்து 369 ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்து உள்ளது. அவரது மனைவி பெயரில், 88 லட்சத்து 57 ஆயிரத்து 31 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் உள்ளன.
மற்றொரு கணக்கில், முருகன் பெயரில், 69 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளன. அவரது மனைவி பெயரில், 1 கோடியே 65 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளன.
மேலும். டில்லியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பாங்கில், 20 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அவரது மனைவி பெயரில் சென்னையில் உள்ள அண்ணாநகர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளையில், 90 லட்சம் ரூபாய் கடன்; மற்றொரு வங்கியில், 10 லட்சம் ரூபாய் என ஒரு கோடி கடன் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

