தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மதுக்கடை வேண்டாம்! மா.கம்யூ., வலியுறுத்தல்

மதுக்கடை வேண்டாம்! மா.கம்யூ., வலியுறுத்தல்

மதுக்கடை வேண்டாம்! மா.கம்யூ., வலியுறுத்தல்


ADDED : மே 07, 2024 10:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2024 10:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி;'பொள்ளாச்சி அருகே வடக்கிபாளையம் பிரிவில் தனியார் மதுக்கடை அமைக்க அனுமதி வழங்க கூடாது,' என, மா.கம்யூ., கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

பொள்ளாச்சி தாலுகா குழு மா.கம்யூ., கட்சியினர், சப் - கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

பொள்ளாச்சி - கோவை ரோட்டில், வடக்கிப்பாளையம் பிரிவில் தனியார் மதுக்கடை அமைய உள்ளதாகவும், அதற்கான கட்டட வேலைகள் நடைபெறுவதாகவும் தெரிகிறது. பொள்ளாச்சி - கோவை ரோட்டில், அதிகமான வாகன போக்குவரத்து உள்ளது. மேலும், மதுக்கடை அமைய உள்ள இடம், குடியிருப்பு பகுதியாக உள்ளது; ஏற்கனவே அதிக விபத்துகள் நடைபெறும் இடமாக வடக்கிப்பாளையம் பிரிவு உள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இந்த வழியைத்தான் பயன்படுத்துகின்றனர்.

எனவே, இப்பகுதியில் மதுக்கடைக்கான கட்டடப்பணிகளை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுக்கடைக்கு அனுமதி வழங்க கூடாது. இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us