/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேண்டாம் தலைவலி! பணம் கொண்டு செல்லும் நோக்கம்; கண்டறிந்து பறிமுதல் செய்ய அறிவுரை
/
வேண்டாம் தலைவலி! பணம் கொண்டு செல்லும் நோக்கம்; கண்டறிந்து பறிமுதல் செய்ய அறிவுரை
வேண்டாம் தலைவலி! பணம் கொண்டு செல்லும் நோக்கம்; கண்டறிந்து பறிமுதல் செய்ய அறிவுரை
வேண்டாம் தலைவலி! பணம் கொண்டு செல்லும் நோக்கம்; கண்டறிந்து பறிமுதல் செய்ய அறிவுரை
ADDED : ஏப் 04, 2024 06:04 AM

கோவை : வாகன சோதனையின்போது, அரசியல் நோக்கத்துக்காக மொத்தமாக பணமோ, பொருட்களோ உரிய ஆவணமின்றி கொண்டு சென்றால் பறிமுதல் செய்யுங்கள். வர்த்தக நோக்கத்துக்காக கொண்டு செல்லும் பொருட்களை பறிமுதல் செய்து, தேவையில்லாத தலைவலியை உருவாக்காதீர்கள் என, பறக்கும் படையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
கோவையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர், ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
வேலை செய்ததை ஆணையத்துக்கு பதிவு செய்ய வேண்டும்; கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காக, ஏதாவது ஒரு வழக்கு பதிவிட்டு, பொருட்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்கின்றனர்.
பறிமுதல் செய்யப்படும் பணம், மாவட்ட கருவூலகத்தில் ஒப்படைக்கப்படுகிறது.
கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்வேதா தலைமையில், மேல்முறையீடு செய்வதற்கு கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.
இவரிடம் மேல்முறையீடு செய்தால், பணம் விடுவிக்கப்படுகிறது; இதற்கு மூன்று முதல் நான்கு நாட்கள் வரை அலைக்கழிக்கின்றனர்.
இச்சூழலில், வர்த்தக நோக்கில் கொண்டு செல்லப்படும் நகை மற்றும் பொருட்களையும், பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
கோவை தெற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், நேற்று முன் தினம் இரவு, இரண்டு கோடியே, 63 லட்சத்து, 81 ஆயிரத்து, 950 ரூபாய் மதிப்பிலான, 140 கிராம் வைர நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இதேபோல், ரூ.14 ஆயிரம் மதிப்பிலான, 11 மொபைல் போன்களை பறிமுதல் செய்திருக்கின்றனர். சில தினங்களுக்கு முன், 'சீனியர் சிட்டிசன்'களிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுபோன்ற பறிமுதல்கள், தேர்தல் பிரிவினருக்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.
'தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தை புரிந்துகொண்டு, அரசியல் நோக்கத்துக்காக பொருட்கள் மற்றும் அதிக பணம் கொண்டு செல்லப்படுகிறதா என கண்காணியுங்கள்; வர்த்தக நோக்கத்துக்காக கொண்டு செல்வோரை சிரமப்படுத்தாதீர்கள்.
கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காக, தேவையற்ற தலைவலியை உருவாக்கிக் கொண்டிருக்காதீர்கள்' என, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, பறக்கும் படை அலுவலர்களுக்கு, அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

