/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடையில் கடும் உடற்பயிற்சி வேண்டாம்! மாரடைப்புக்கு வாய்ப்பு என டாக்டர் எச்சரிக்கை
/
கோடையில் கடும் உடற்பயிற்சி வேண்டாம்! மாரடைப்புக்கு வாய்ப்பு என டாக்டர் எச்சரிக்கை
கோடையில் கடும் உடற்பயிற்சி வேண்டாம்! மாரடைப்புக்கு வாய்ப்பு என டாக்டர் எச்சரிக்கை
கோடையில் கடும் உடற்பயிற்சி வேண்டாம்! மாரடைப்புக்கு வாய்ப்பு என டாக்டர் எச்சரிக்கை
ADDED : மே 01, 2024 11:00 PM

பொள்ளாச்சி : வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், கடும் உடற்பயிற்சி மேற்கொண்டால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படலாம் என, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஹீட் ஸ்ட்ரோக், நீரிழப்பு, மயக்கம், வெப்ப நோய்கள் அதிகரித்து வருகின்றன. வெயிலின் தாக்கம் அதிகளவில் இருக்கும், இந்த காலகட்டத்தில் கடும் உடற்பயிற்சி மேற்கொள்வது ஆபத்து என்கின்றனர் டாக்டர்கள்.
கோவை அரசு மருத்துவமனை இருதயவியல் துறை உதவி பேராசிரியர் ஜெகதீஷ் கூறியதாவது: தற்போது வெயில் காலம் என்பதால், சாதாரணமாகவே நீரிழப்பு அதிகம் இருக்கும். அதோடு, கடும் உடற்பயிற்சியும் மேற்கொள்வதால், நீரிழப்பு அதிகம் ஏற்படும். இதன் காரணமாக, ரத்தத்தின் அடர்த்தி அதிகரிக்கும். ரத்த ஓட்டம் சீராக இருக்காது.
மூளைக்கு செல்லும் ரத்தம் உறைந்து, பக்கவாதம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதேபோல், பிற உறுப்புகளுக்கு செல்லும் ரத்தமும் குறைவதால், அந்த உறுப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம்.
இதைத்தவிர்க்க, அதிகமாக நீர் அருந்த வேண்டும். ஏற்கனவே இருதய பாதிப்பு இருப்பவர்கள், சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள், ரத்தம் தொடர்பான நோய் உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்ளக்கூடாது. மிதமான பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
புதிதாக உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், சிறிது, சிறிதாகதான் பயிற்சியை அதிகரிக்க வேண்டும்.
அதிக வெயில் இருக்கும் போது, நடைபயிற்சி மேற்கொள்வதை தவிர்க்கலாம். விழிப்புடன் இருப்பது நல்லது. வெப்பம் அதிகம் இருக்கும் போது, வெளியில் செல்வதை தவிர்க்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

