/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அ.தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது! முன்னாள் அமைச்சர் பேச்சு
/
அ.தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது! முன்னாள் அமைச்சர் பேச்சு
அ.தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது! முன்னாள் அமைச்சர் பேச்சு
அ.தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது! முன்னாள் அமைச்சர் பேச்சு
ADDED : ஆக 26, 2024 01:22 AM

பொள்ளாச்சி:'வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதற்கு கடினமாக உழைப்பை கொடுக்க வேண்டும்,' என, பொள்ளாச்சியில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார்.
பொள்ளாச்சி நகர அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம், தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. நகரச்செயலாளர் கிருஷ்ணகுமார் வரவேற்றார்.
எம்.எல்.ஏ., தாமோதரன் பேசுகையில், ''லோக்சபா தேர்தலில் சிறு சரிவை சந்தித்துள்ளோம். அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை மக்கள் மறந்து விட்டனர். வரும் சட்டசபை தேர்தலில் நல்ல கூட்டணியும் அமைய உள்ளது. சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும்,'' என்றார்.
எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது: லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட சரிவில் இருந்து மீள்வோம். தடுப்பணைகள், கிராமப்புற சாலைகள் என பலதிட்டங்களை நாம் செயல்படுத்தியுள்ளோம். இதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். கட்சி என்பது பொழுது போக்கு இடமாக நினைக்க வேண்டாம். உயிர் மூச்சாக நினைத்து உழைக்க வேண்டும்.
தினமும், மூன்று மணி நேரம் அந்தந்த வார்டுக்குள் கட்சி பணியாற்றினால், வெற்றி நிச்சயம். மக்களோடு மக்களாக பழகி அவர்களது பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க., ஆட்சி அமையும்.
இவ்வாறு, பேசினார்.
முன்னாள் அமைச்சர் வேலுமணி, நகரப்பகுதியில் ஓட்டு சதவீதம் குறைவது குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை செய்தார். அதன்பின் அவர் பேசியதாவது:
லோக்சபா தேர்தலில், தோல்வி பெற்றாலும் அதில் இருந்து மீண்டு, மீண்டும் ஆட்சியை பிடித்த வரலாறு அ.தி.மு.க.,வுக்கு உள்ளது. தெருமுனை பிரசாரம் செய்வது, கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடத்துவது என கட்சி நிர்வாகிகள் முனைப்பு காட்ட வேண்டும்.
எந்த கொம்பனும், அ.தி.மு.க., வை அசைக்க முடியாது; மீண்டு எழுந்து வரும் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதியிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். அதற்கு அனைவரும் கடுமையான உழைப்பை வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.