/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் கடைகளில் இனி காத்திருக்க வேண்டாம்! 4ஜி புதிய பி.ஓ.எஸ்., இயந்திரங்கள் வந்தாச்சு
/
ரேஷன் கடைகளில் இனி காத்திருக்க வேண்டாம்! 4ஜி புதிய பி.ஓ.எஸ்., இயந்திரங்கள் வந்தாச்சு
ரேஷன் கடைகளில் இனி காத்திருக்க வேண்டாம்! 4ஜி புதிய பி.ஓ.எஸ்., இயந்திரங்கள் வந்தாச்சு
ரேஷன் கடைகளில் இனி காத்திருக்க வேண்டாம்! 4ஜி புதிய பி.ஓ.எஸ்., இயந்திரங்கள் வந்தாச்சு
ADDED : மே 23, 2024 04:48 AM

கோவை: இனி ரேஷன் கடைகளில், பொருட்கள் வாங்க நீண்ட நேரம் நிற்க வேண்டிய அவசியமில்லை. 4ஜி திறன் கொண்ட பி.ஓ.எஸ்., இயந்திரங்கள் வழங்கியதால், இனி சில நிமிடங்களில் பொருட்களை வாங்கி வீடு திரும்பலாம்.
கோவையிலுள்ள, 1,145 ரேஷன் கடைகளுக்கான புதிய 4ஜி, பி.ஓ.எஸ்.,இயந்திரங்கள் வழங்கும் பணி, பயிற்சியுடன் நேற்று வினியோகிக்கப்பட்டது.
கோவை, பாரதியார் சாலையிலுள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓயாசிஸ் நிறுவன பொதுமேலாளர் தியாகமூர்த்தி, புதிய இயந்திரங்களை ரேஷன்கடை பணியாளர்களுக்கு வழங்கி பயிற்சியளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: புதிய 4 ஜி திறன் கொண்ட பி.ஓ.எஸ்.இயந்திரம் மிக வேகமாக செயல்படும். அதற்கேற்ப சாப்ட்வேர்கள் மற்றும் செயலிகள் இணைக்கப்பட்டுள்ளன.
ஸ்மார்ட் ரேஷன்கார்டுகளை, எளிதாகவும் விரைவாகவும் ஸ்கேன் செய்து 'லின்க்' செய்யும்.
அதே போல், ரேஷன்கார்டுதாரரின் கைரேகையை வேகமாக ஸ்கேன் செய்யும்.
அப்படி ரேகை பதிவாகாத பட்சத்தில், கருவிழிகளை ஸ்கேன் செய்து பொருட்களை வழங்கலாம்.
அதற்கு ஏற்ப, அதிவேக இணைய சேவை கிடைக்க, இயந்திரத்தில் இரண்டு 'ஸ்லாட்டுகள்' கொடுக்கப்பட்டுள்ளன. அதில் இரண்டு நெட்ஒர்க்குகளை கொண்ட, சிம்கார்டுகளை பொருத்திக்கொள்ளலாம்.இவை இரண்டுமே 4ஜி இணைய சேவையை கொண்டது. ஒவ்வொரு கார்டு பில்லிங்கிற்கும் ரசீது வழங்கும் வசதி உள்ளது.
குறுஞ்செய்தியாகவும், ரேஷன் கார்டுதாரர்களுக்கு செல்லும். இயந்திரம் நான்கு மணி நேரம் சார்ஜ் நிற்கும். மின் இணைப்பில் இணைத்தும் பயன்படுத்தலாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நேற்று மூன்று பிரிவுகளாக பயிற்சி அளித்து, ரேஷன்கடைகாரர்களுக்கு பி.ஓ.எஸ்., இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
கோவையில் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி, பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லுாரி ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.

