/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒழியுமா நெகிழி! பாலமலையில் தாராள பயன்பாடு; வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல்
/
ஒழியுமா நெகிழி! பாலமலையில் தாராள பயன்பாடு; வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல்
ஒழியுமா நெகிழி! பாலமலையில் தாராள பயன்பாடு; வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல்
ஒழியுமா நெகிழி! பாலமலையில் தாராள பயன்பாடு; வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல்
ADDED : ஆக 06, 2024 11:40 PM

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே, 'பிளாஸ்டிக்' எனப்படும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. வன விலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக, சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அரங்கநாதர் கோவில் வளாகம் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலமலை வட்டாரத்தில் உள்ள பெரும்பதி, பெருக்குப்பதி, பெருக்குப்பதிபுதூர், குஞ்சூர்பதி, மாங்குழி, பசுமணி உள்ளிட்ட மலை கிராமங்களை ஒட்டி உள்ள பகுதிகளில், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இப்பகுதியில் பிளாஸ்டிக் பை, டம்ளர் பயன்படுத்தக் கூடாது என, ஏற்கனவே நாயக்கன்பாளையம் உள்ளாட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு பாலமலை ரங்கநாதர் கோவிலை சுற்றியுள்ள இடங்களில், கணிசமாக அதிகரித்து உள்ளது.
கோவிலுக்கு அருகே உள்ள கடைகளில், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதை வாங்கும் பக்தர்கள் நீரை அருந்திவிட்டு பாட்டில்களை, அதே பகுதியில் வீசி செல்கின்றனர்.
இப்பகுதியில் இரவு நேரங்களில் காட்டு யானை, மான், காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதால், அதை உண்ணும் வனவிலங்குகள் அஜீரண கோளாறு ஏற்பட்டு, பரிதாபமாக இறக்கின்றன.
நச்சு ரசாயனம்
வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'பாலமலை அடிவாரத்தில்உள்ள வனத்துறை சோதனை சாவடியில், சூழல் பாதுகாப்பு குறித்து அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். அதில், மலைப்பகுதியில் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை எடுத்துச் செல்ல கூடாது என அறிவுறுத்தி உள்ளனர். ஆனாலும், இதை யாரும் கண்டு கொள்வதே இல்லை. பிளாஸ்டிக்கில் இருந்து வெளியேறும் நச்சு ரசாயனங்கள் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
'பாலமலையில் வனவிலங்குகள் மட்டுமில்லாமல், அங்கு பழங்குடியினருக்கு சொந்தமான ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் ஏராளமாக உள்ளன. மேய்ச்சலின்போது, பிளாஸ்டிக் பை மற்றும் பாட்டில்களை உண்ணும் ஆடு, மாடுகள் ஆங்காங்கே இறந்து கிடப்பது, சர்வ சாதாரணமாகிவிட்டது.
இதை தடுக்க பாலமலை அடிவாரத்தில் உள்ள சோதனைச் சாவடியில், வனத்துறையினர், ஊழியர்களை நியமனம் செய்து, பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். இல்லாவிட்டால், வன விலங்குகள் உயிரிழப்பை தடுக்க முடியாது' என்றனர்.