/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பை எடுக்க ஊழியர்கள் இல்லை: ஊராட்சி நிர்வாகம் புகார்
/
குப்பை எடுக்க ஊழியர்கள் இல்லை: ஊராட்சி நிர்வாகம் புகார்
குப்பை எடுக்க ஊழியர்கள் இல்லை: ஊராட்சி நிர்வாகம் புகார்
குப்பை எடுக்க ஊழியர்கள் இல்லை: ஊராட்சி நிர்வாகம் புகார்
ADDED : ஆக 22, 2024 02:17 AM
கோவில்பாளையம் : 'குப்பை அள்ளுவதற்கு ஆட்கள் இல்லை' என ஊராட்சி நிர்வாகம் 'மக்களுடன் முதல்வர்' முகாமில் புகார் தெரிவிக்கப்பட்டது.
அன்னூர் தாலுகாவில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில் ஆறாவது முகாம் நேற்றுமுன்தினம் கொண்டையம்பாளையம் அருகே ஆசியன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
முகாமில் கொண்ட யம்பாளையம் மற்றும் கள்ளிப்பாளையம் ஊராட்சி மக்கள் பங்கேற்றனர். கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தலைமை வகித்து மக்களிடம் மனுக்கள் பெற்றார். துணை கலெக்டர் மகேஸ்வரி அரசின் நலத் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
கொண்டையம் பாளையம் ஊராட்சி சார்பில் அளித்த மனுவில் 'ஊராட்சியில் வீடுகள் மூன்று மடங்கு அதிகரித்து விட்டன. குப்பையும் அதிகரித்து விட்டது. ஆனால் குப்பை அள்ள போதிய தூய்மை பணியாளர்கள் இல்லை. பேட்டரி வாகனங்கள் குறைவு. கூடுதலாக தூய்மை பணியாளர்கள் நியமித்து, பேட்டரி வாகனங்கள் வழங்க வேண்டும்.
பழைய குடியிருப்புகளுக்கு நான்கு நாட்களுக்கு ஒரு முறையும், புதிய குடியிருப்புகளுக்கு எட்டு நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வழங்குகிறோம்.
குடிநீர் கூடுதலாக தர வேண்டும். பல புதிய குடியிருப்புகளில் சாலை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டிருந்தது.