/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரு வாரத்திற்குள் 'டிசைன்' இறுதி செய்யும் பணி கிடைத்தது என்.ஓ.சி.,; ஆலோசனை கோரும் எஸ்.டி.ஏ.டி.,

ADDED : பிப் 27, 2025 09:31 PM

கோவை,; சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க, விமான நிலைய ஆணையம் என்.ஓ.சி., வழங்கியுள்ள நிலையில், பெறப்படும் ஆலோசனைகள் அடிப்படையில், 'டிசைன்' இறுதி செய்ய, எஸ்.டி.ஏ.டி., முடிவு செய்துள்ளது.
ஒண்டிப்புதுாரில் தற்போது திறந்தவெளி சிறை மைதானம் தேர்வு செய்யப்பட்டு, மைதானம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை, கடந்தாண்டு ஜூன் மாதம் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்தார். தொடர்ந்து, 20 ஏக்கர் கொண்ட அந்த இடமானது, விளையாட்டு துறைக்கு வகை மாற்றமும் செய்யப்பட்டு, மண் பரிசோதனையும் செய்யப்பட்டது.
தற்போது, ஸ்டேடியம் வடிவமைப்பு தயாரித்தல் உள்ளிட்ட தேவைகளுக்காக, வழங்கப்பட்டுள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து கருத்துகளையும், ஆலோசனைகளையும், அனைத்து தரப்பினரும் வழங்க, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்(எஸ்.டி.ஏ.டி.,) அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி, இந்த இடவசதி ஸ்டேடியம் அமைக்க போதுமானதா, சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைந்தால் தமிழகத்துக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் ஏதுவாக இருக்குமா, பொது போக்குவரத்துக்கு ஏற்ற இடமா, கூடுதல் வசதிகள் தேவை என்பன உட்பட, 20 கேள்விகள் இடம்பெற்றுள்ளன.
இது கிரிக்கெட் வீரர், ரசிகர்களிடம் குறிப்பாக கிரமாப்புறத்தை சேர்ந்தவர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், வெறும் அறிவிப்பாக, திட்டத்தை கிடப்பில் போடாமல் நிதியை ஒதுக்கீடு செய்து பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பு.