/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேட்புமனு தாக்கல் இன்னும் சூடுபிடிக்கல! இதுவரை இரு சுயேட்சைகள் மனு
/
வேட்புமனு தாக்கல் இன்னும் சூடுபிடிக்கல! இதுவரை இரு சுயேட்சைகள் மனு
வேட்புமனு தாக்கல் இன்னும் சூடுபிடிக்கல! இதுவரை இரு சுயேட்சைகள் மனு
வேட்புமனு தாக்கல் இன்னும் சூடுபிடிக்கல! இதுவரை இரு சுயேட்சைகள் மனு
ADDED : மார் 22, 2024 01:12 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட, கோவையில் நேற்று சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இதுவரை, இரு வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ஆவணங்களில்லாமல் பணம் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், வேட்பு மனுத்தாக்கள் நேற்று முன்தினம் துவங்கியது. பொள்ளாச்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில், நேற்று காலை, 11:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வரவில்லை.
வரும், 27ம் தேதி வரை மனுத்தாக்கல் நடைபெறுகிறது. வரும் நாட்களில் வேட்புமனு தாக்கல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவையில், பொள்ளாச்சி தொகுதிக்காக சுயே., வேட்பாளராக முன்னாள் ராணுவ வீரர் மதுரை விநாயகம் மனுத்தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் தீவிரமடையாத நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஒருவர்; சுயேட்சைகள் எட்டு பேர் என, மொத்தம் ஒன்பது வேட்பு மனு படிவங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.
பலத்த பாதுகாப்பு
பொள்ளாச்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. அதில், பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர்கள் ரத்னகுமார், சோமசுந்தரம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முதல் மத்திய ரிசர்வ் படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எட்டு மணி நேரத்துக்கு நான்கு பேர் வீதம் மொத்தம், 16 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

