/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழில் உரிமம் பெறாத வணிக நிறுவனங்கள் பதிவு செய்யாவிடில் நடவடிக்கை உறுதி
/
தொழில் உரிமம் பெறாத வணிக நிறுவனங்கள் பதிவு செய்யாவிடில் நடவடிக்கை உறுதி
தொழில் உரிமம் பெறாத வணிக நிறுவனங்கள் பதிவு செய்யாவிடில் நடவடிக்கை உறுதி
தொழில் உரிமம் பெறாத வணிக நிறுவனங்கள் பதிவு செய்யாவிடில் நடவடிக்கை உறுதி
ADDED : மே 29, 2024 11:54 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் நடத்துவோர் தொழில் உரிமம் பதிவு செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், வளர்ந்து வரும் நகரமாக பொள்ளாச்சி அமைந்துள்ளது. நாளுக்கு நாள் மருத்துவமனை, ஓட்டல், மளிகை, துணிக்கடை என, சிறிய மற்றும் பெரிய அளவில் தொழில் நிறுவனங்கள் பெருகி வருகின்றன.
அவ்வகையில், நகராட்சி பகுதிகளில் செயல்படும் அனைத்து தொழில் நிறுவனங்களும், கட்டாயம் தொழில் உரிமம் பெற வேண்டும். ஆண்டு தோறும், பிப்., மாதம் இதற்கான தொகையை நகராட்சியில் செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஆனால், நகரில், சிலர் மட்டுமே தொழில் உரிமம் பதிவு செய்ய ஆர்வம் காட்டினர். பெரும்பாலான வணிகக் கடைக்காரர்கள், தொழில் உரிமம் பெறவில்லை. இதையடுத்து, கடைகளுக்கு, உரிமம் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தி, நோட்டீஸ் வழங்கப்பட்டது.
லோக்சபா தேர்தல் காரணமாக, தொழில் உரிமம் பதிவுக்கான பணிகள், முழுமை பெறாமல் போனது. தற்போது, நகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள், கடைகள்தோறும் நேரடியாகச் சென்று தொழில் உரிமம் பெற எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
நகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும், பிப்., மாதத்திற்குள் வணிக நிறுவனங்கள், தொழில் உரிமம் புதுப்பிக்க வேண்டும். வணிகம் அடிப்படையில், மளிகைக்கடை, 700 முதல், 3 ஆயிரம் வரையும், உணவகத்திற்கு, 3 முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையும், தங்கும் விடுதிகளுக்கு, 3 முதல் 10 ஆயிரம் ரூபாய் என, தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ப, உரிமத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நகரில், குறைந்தபட்ச தொகை செலுத்த அறிவுறுத்தியும், பெரும்பாலான கடைக்காரர்கள் தொழில் உரிமம் செலுத்த முன்வருவதில்லை.
இதனால், நேரடியாக கடைகள்தோறும் சென்று, தொழில் உரிமம் பெறவும், தவறும்பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
உரிமம் இல்லாமல், செயல்படும் கடைகள், வணிக நிறுவனங்கள் கண்டறியப்பட்டால் நகராட்சி விதிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.