/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடிப்பிடிக்காத குக்கர்; இது செம டக்கர்!
/
அடிப்பிடிக்காத குக்கர்; இது செம டக்கர்!
ADDED : ஆக 18, 2024 01:18 AM

இ.எல்.ஜி.ஐ., (எல்.ஜி.,) அல்ட்ரா அரங்கில், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் இரு அடுக்கு, மத்தியில் அலுமினியம் என மூன்று அடுக்கு கொண்ட டிரைபிளை குக்கரை அறிமுகம் செய்துள்ளனர். வெப்பத்தை சமமாக பரவச் செய்து, விரைவாக சமைக்க உதவும். இஞ்சக்சன்மோல்ட் கைப்பிடிகள் உறுதியானவை. இது எளிதில் அடிப்பிடிக்காது. சுத்தம் செய்வது எளிது. காஸ், இண்டக்சன் என இரு வகைகளிலும் சமைக்கலாம். 2 லிட்டர் முதல் 5.5 லிட்டர் வரை அளவுகளில் கிடைக்கிறது. கண்காட்சியில் வாங்கினால் 20 சதவீதம் ஆபர் உண்டு.
2 இன் ஒன் கிரைண்டர்
கோவை லட்சுமி ஸ்டாலில், ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் ஆன, டில்ட் வகை கிரைண்டர் பக்கா டிரெண்டிங்கில் உள்ளது. ஒரே கிரைண்டரில் 3 லிட்டர், 1 லிட்டர் என தேவைக்கேற்ப மிக்ஸி ஜாரை மாற்றுவது போல மாற்றி பயன்படுத்திக் கொள்ளலாம். 4 லிட்டரிலும் இந்த வசதி உள்ளது. கிரைண்டர் உற்பத்திக்கு புகழ்பெற்ற இவர்களிடம், வர்த்தக ரீதியான கிரைண்டர்களும் தரமாகக் கிடைக்கும்.

