/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வடமாநில தொழிலாளர்கள் தி.மு.க., வில் ஐக்கியம்
/
வடமாநில தொழிலாளர்கள் தி.மு.க., வில் ஐக்கியம்
ADDED : ஜூலை 08, 2024 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை;எல்.பி.எப்., தொழிற்சங்கத்தில் வடமாநில தொழிலாளர்கள் இணைந்தனர்.
வால்பாறையில் தேயிலை தொழிலில், முக்கிய தொழிலாக உள்ளது. பெரும்பாலான தொழிலாளர்கள் எஸ்டேட்டை விட்டு வெளியேறிய நிலையில், தொழிலாளர் பற்றாக்குறையை போக்க, வடமாநிலத்தொழிலாளர்கள் அதிக அளவில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வால்பாறை எல்.பி.எப்., தோட்ட தொழிலாளர் பிரிவு பொதுச்செயலாளர் வினோத் தலைமையில், பல்வேறு எஸ்டேட் பகுதியில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள், தி.மு.க., தொழிற்சங்கத்தில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில், செயலாளர் ராஜ், கவுன்சிலர்கள் கனகமணி, மகுடீஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.