/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வடக்கு குறுமைய போட்டி; வெற்றி வாகை சூடிய அரசுப் பள்ளி மாணவியர்
/
வடக்கு குறுமைய போட்டி; வெற்றி வாகை சூடிய அரசுப் பள்ளி மாணவியர்
வடக்கு குறுமைய போட்டி; வெற்றி வாகை சூடிய அரசுப் பள்ளி மாணவியர்
வடக்கு குறுமைய போட்டி; வெற்றி வாகை சூடிய அரசுப் பள்ளி மாணவியர்
ADDED : செப் 03, 2024 01:40 AM

கோவை;வடக்கு குறுமைய போட்டியில் இடம்பெற்ற, 1,500 மீ., ஓட்டத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த இரு மாணவியர், இரு இடங்களுடன் பெருமை சேர்த்துள்ளனர்.
பள்ளி கல்வித்துறை சார்பில், கோவை நேரு ஸ்டேடியத்தில் பள்ளி மாணவர்களுக்கான வடக்கு குறுமைய போட்டிகள் நேற்று துவங்கின; இன்று நிறைவடைகிறது.
போட்டிகளை, பயனீர் மில்ஸ் பள்ளி தலைமை ஆசிரியர் பிரியா, விவேகம் மெட்ரிக் பள்ளி முதல்வர் மீனா குமாரி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
துவக்கத்தில், தேசியக்கொடி ஏற்றப்பட்டு, ஒலிம்பிக் ஜோதியுடன் மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது.
இதில், 40க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த, 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். 100, 200, 400, 1,500 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில், 17 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான, 1,500 மீ., ஓட்டத்தில், பிஷப் பிரான்சிஸ் பள்ளியை சேர்ந்த ஹரினி ஸ்ரீ முதலிடமும், நரசிம்ம நாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி மகாஸ்ரீ இரண்டாம் இடமும், அதே பள்ளியை சேர்ந்த கலைவாணி மூன்றாம் இடமும் பிடித்து, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அதேபோல், 17 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான வட்டு எறிதல் போட்டியில், சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி கிருத்திகா, பிஷப் பிரான்சிஸ் பள்ளி பூஜிதா, விவேகம் மெட்ரிக் பள்ளி தன்யா ஆகியோர், முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
ஜூனியர் மாணவர்களுக்கான வட்டு எறிதல் போட்டியில், தம்பு மேல்நிலைப்பள்ளி மாணவர் தீபக்குமார் முதலிடம் பிடித்தார்.
ரங்கசாமி நாயுடு பள்ளியை சேர்ந்த கணீஸ், மணிகண்டன் ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்தனர்.
குண்டு எறிதல் போட்டியில், 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில், தம்பு மேல்நிலைப்பள்ளி ஸ்ரீஹரி, பயனீர் மில்ஸ் பள்ளி தேவசோழன், ஹரி ஓம் மெட்ரிக் பள்ளி நிதீஷ் ஆகியோர், முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
தொடர்ந்து, இன்றும் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன.