/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அங்கீகாரம் வழங்காமல் இழுத்தடித்த ஊராட்சி செயலர்களுக்கு நோட்டீஸ்
/
அங்கீகாரம் வழங்காமல் இழுத்தடித்த ஊராட்சி செயலர்களுக்கு நோட்டீஸ்
அங்கீகாரம் வழங்காமல் இழுத்தடித்த ஊராட்சி செயலர்களுக்கு நோட்டீஸ்
அங்கீகாரம் வழங்காமல் இழுத்தடித்த ஊராட்சி செயலர்களுக்கு நோட்டீஸ்
ADDED : மார் 30, 2024 12:56 AM
அன்னூர்;மனைப் பிரிவுகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் காலதாமதம் செய்ததாக, 14 ஊராட்சி செயலர்களுக்கு, அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அன்னூர் ஒன்றியத்தில், 14 ஊராட்சிகளின் செயலர்களுக்கு, அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) செந்தில் குமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது :
அன்னூர் வட்டாரத்தில், கிராம ஊராட்சிகளில், மனை பிரிவு அங்கீகாரம் கிடைக்காததால் விண்ணப்பதாரர்கள் மறு விற்பனை செய்வதிலும், வங்கி கடன் பெறுவதிலும் தாமதம் ஏற்படுவதாக தொடர்ந்து புகார் தெரிவித்துள்ளனர். எனவே, தாமதத்தை தவிர்க்க விரைந்து செயல்பட ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
விண்ணப்பதாரர்களுக்கு ஒப்புகை சீட்டு உடனே தர வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட நாளன்றே குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்ப வேண்டும்.
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கை பெற்று, மனைப்பிரிவு அங்கீகாரம் வழங்க வேண்டும். இந்த நடைமுறையில் ஏதேனும், சுணக்கம் காட்டினால் சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

