/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'என்.டி.சி.,சொத்துக்களை விற்கக்கூடாது'
/
'என்.டி.சி.,சொத்துக்களை விற்கக்கூடாது'
ADDED : ஏப் 16, 2024 12:27 AM
கோவை;என்.டி.சி., சொத்துக்களை தனியாருக்கு அளிப்பதை, ஒருபோதும் ஏற்க மாட்டோம் என கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த 12ம் தேதி, கோவை இந்திய தொழில் வர்த்தக சபையில், கோவை லோக்சபா தொகுதி வேட்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், பேசிய பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, ''கோவை நகரின் முக்கிய இடங்களில் தேசிய பஞ்சாலைக் கழகத்துக்குச் சொந்தமான இடங்கள் உள்ளன. அவற்றை மேம்பாட்டுக்காக பயன்படுத்தி,அதன் மூலம் கிடைக்கும் வருவாயை,ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாகவழங்க வெண்டும்,'' என்று பேசினார்.
இதுதொடர்பாக, கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ராஜாமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
1974ம் ஆண்டின் என்.டி.சி., சட்டப்படி, என்.டி.சி.,யின் சொத்துகளும், வருவாயும் அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். 23 என்.டி.சி., ஆலைகளை நவீனப்படுத்தி, மீண்டும் இயக்குவதற்கு காலியிடத்தின் வருவாயைப் பயன்படுத்த வேண்டும். காலியிடங்களை மேம்பாடு என்ற பெயரில், தனியார் பெருநிறுவனங்களுக்கு கொடுப்பதை, ஒருபோதும் தொழிற்சங்கங்கள் ஏற்காது.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

