/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூர் திருமடத்தில் நுால் வெளியீட்டு விழா
/
பேரூர் திருமடத்தில் நுால் வெளியீட்டு விழா
ADDED : ஜூன் 12, 2024 11:36 PM
தொண்டாமுத்தூர் : பேரூராதினம் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில், மகம் நாள் மாத குருபூஜை நேற்று நடந்தது. இதில், பேரூராதினம் மருதாசல அடிகளார் தலைமையில், தமிழ் வேள்வி, திருமஞ்சனம், பேரொளி வழிபாடு நடந்தது. தொடர்ந்து திருவாசக முற்றோதல் மற்றும் பா ஒன்று பூ ஒன்று வழிபாடு நடந்தது.
அதனையடுத்து, நேஷனல் மாடல் பள்ளி தமிழ் ஆசிரியர் மதன் பாரத் எழுதிய, மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்கு எளிமையாக தயாரிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தமிழ்மாறன் அலங்காரம் மற்றும் வள்ளியம்மன் கும்மி ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது.
இவ்விழாவில், பேரூராதினம் மருதாசல அடிகளார் நூல்களை வெளியிட, கல்லூரி செயலர் சுப்பிரமணியன், கல்லூரியின் கல்வி இயக்குனர் சரவண செல்வன், முதல்வர் சேதுராஜன் ஆகியோர் நூலை பெற்று கொண்டனர். ஏராளமானோர் பங்கேற்றனர்.

