/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் செவிலியர் மாணவிகள் 'விசிட்'
/
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் செவிலியர் மாணவிகள் 'விசிட்'
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் செவிலியர் மாணவிகள் 'விசிட்'
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் செவிலியர் மாணவிகள் 'விசிட்'
ADDED : மே 30, 2024 11:27 PM

மேட்டுப்பாளையம்;வெள்ளியங்காட்டில் உள்ள கோவை மாநகராட்சியின் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை, கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் நேரில் பார்வையிட்டனர்.
காரமடை அருகே வெள்ளியங்காடு பகுதியில், கோவை மாநகராட்சியின் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும், செவிலியர் பயிற்சி பள்ளியின் மாணவிகள் 91 பேர் ஆசிரியர்களுடன் நேற்று பார்வையிட்டனர். மாணவிகளுக்கு, சுத்திகரிப்பு நிலையத்தின் அலுவலர்கள் தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்படும் முறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
இதுகுறித்து செவிலியர் பயிற்சி பள்ளியின் முதல்வர் சர்ளா தங்கராஜூ கூறுகையில், 'செவிலியர் பயிற்சி பள்ளியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு, தண்ணீர் சுத்திகரிப்பு தொடர்பான பாடம் உள்ளது. இதையடுத்து, தண்ணீர் எவ்வாறு சுத்திகரிப்பு செய்யப்படுகிறது என்பதனை நேரில் அறிந்து கொள்வதற்காக இங்கே வந்தோம். மாணவிகளின் சந்தேகங்களுக்கு அலுவலர்கள் பதிலளித்து தெளிவுப்படுத்தினர். இங்கு வந்தது மாணவிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமைந்தது' என்றார்.
இந்த நிகழ்வின் போது செவிலியர் பயிற்சி பள்ளி துணை முதல்வர் வாணி கணேசன், விரிவுரையாளர்கள் கண்மணி, கனிமொழி, அபிராமி, ஞானசுந்திரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.-----