/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனையில் ஊட்டச்சத்து விநியோகம்
/
அரசு மருத்துவமனையில் ஊட்டச்சத்து விநியோகம்
ADDED : மார் 11, 2025 04:12 AM
அன்னுார்: அன்னுார் அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கு, ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டன.
உலக மகளிர் தினம் மற்றும் தமிழக வெற்றிக்கழகம் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, அன்னுார் அரசு மருத்துவமனையில், ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. பால், பிஸ்கட், ரொட்டி, பழங்கள் அடங்கிய தொகுப்புகள் அரசு மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு வழங்கப்பட்டன.
இப்பொருட்களை தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் சங்கர் வழங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், வடக்கு ஒன்றிய செயலாளர் விஜய் உள்பட ஒன்றிய, நிர்வாகிகள் பங்கேற்றனர். குப்பனுார் ஊராட்சி, ஆலாங்குட்டையில் கொடியேற்று விழா நடந்தது.