/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர்வள ஆதாரத்கதை பெருக்கும் சோலைக்காடுகள் சிறப்பு திட்டம் வகுத்து பாதுகாக்கணும்
/
நீர்வள ஆதாரத்கதை பெருக்கும் சோலைக்காடுகள் சிறப்பு திட்டம் வகுத்து பாதுகாக்கணும்
நீர்வள ஆதாரத்கதை பெருக்கும் சோலைக்காடுகள் சிறப்பு திட்டம் வகுத்து பாதுகாக்கணும்
நீர்வள ஆதாரத்கதை பெருக்கும் சோலைக்காடுகள் சிறப்பு திட்டம் வகுத்து பாதுகாக்கணும்
ADDED : ஜூன் 24, 2024 10:42 PM
பொள்ளாச்சி:வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில், அழியும் தருவாயில் உள்ள சோலைக்காடுகளை பாதுகாத்து, நீர்வள ஆதாரத்தை பெருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடரில், குட்டையான மரங்களும், புல்வெளிகளும் சேர்ந்த சோலைக்காடுகள் அதிகம் உள்ளன.
அவ்வகையில், நீலகிரி மாவட்டத்தில் முதுமலை மற்றும் முக்கூர்த்தி; திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல்; கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை, திருநெல்வேலி மாவட்டத்தில் அகஸ்தியர்மலை என, 30க்கும் மேற்பட்ட சோலைக்காடுகள் உள்ளன.
இக்காடுகள் நீர்வள ஆதாரத்துக்கு பெரிதும் உதவுகின்றன. சோலைக்காட்டில் உள்ள மரங்கள், வேரில் மழை நீரை சேமித்து வைத்து சிறிது சிறிதாக வெளியேற்றும். புல்வெளியில் பஞ்சு போன்ற அமைப்பும் மழை நீரை சேமிக்கும்.
அதேபோல், சோலைக்காட்டின் மண் பரப்பும் மழை நீரைச் சேமிக்கும். இந்த நீர் ஆதார அமைப்புகள் வாயிலாகத்தான் அருவிகள் மற்றும் ஆறுகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுகிறது.
ஆனால், தற்போது, வால்பாறை சுற்றுப்பகுதிகளில் சோலைக்காடுகள் இருந்தும் அவ்வபோது அருவிகள் மற்றும் ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சோலைக்காடுகள் அழிவுக்கு, வேட்டில், பைன், யூகாலிப்டஸ், அக்சேசியா உள்ளிட்ட மரங்களும், களைச் செடிகளும் காரணமாகும். பைன் மரங்களில் இருக்கும் ஒருவகை வேதியியல் பொருள், மரங்களுடைய முளைப்புத் திறனை குறைக்கிறது.
வனப்பகுதியில் காபி மற்றும் நறுமணப் பயிர்கள் சாகுபடியாலும், சோலைக் காடுகள் அழிகின்றன. சோலைக் காடுகளை பாதுகாக்க, வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டாலும் சுற்றுப்பகுதி மக்களின் ஒத்துழைப்பு அவசியம். இந்நிலையில், சோலைக்காடுகளை பாதுகாக்க வனத்துறையினர் சிறப்பு திட்டங்களை வகுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.