ADDED : ஆக 11, 2024 10:44 PM

அ நிறம் | அளவு
கோவை:கோவை வி.ஜி.எம்., கேஸ்ட்ரோ மருத்துவமனை சார்பில், 4வது ஆண்டாக உடல் பருமன் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மாரத்தான், வ.உ.சி., மைதானத்தில் நடைபெற்றது.
இதில் வீல்சேர் மாற்றுத்திறனாளிகள் உட்பட, 3000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று, 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர், 3 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளாக ஓடினர்.
மராத்தான் போட்டியில் பங்கேற்ற டாக்டர் மோகன் பிரசாத் மற்றும் ஆர்த்தோ டாக்டர் சுமன் ஆகியோர் கூறும்போது, 'நாட்டில் மூன்றில் ஒருவருக்கு, உடல் பருமன் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், 11 முதல், 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கிராமப்புறத்தை விட நகர்புறத்தார் உடல் பருமனால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்னை, குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை' என்றனர்.
