/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இலவச வீட்டுமனை இடம் ஆக்கிரமிப்பு; முக்காடு அணிந்து கலெக்டரிடம் மனு
/
இலவச வீட்டுமனை இடம் ஆக்கிரமிப்பு; முக்காடு அணிந்து கலெக்டரிடம் மனு
இலவச வீட்டுமனை இடம் ஆக்கிரமிப்பு; முக்காடு அணிந்து கலெக்டரிடம் மனு
இலவச வீட்டுமனை இடம் ஆக்கிரமிப்பு; முக்காடு அணிந்து கலெக்டரிடம் மனு
ADDED : செப் 05, 2024 12:33 AM

கோவை : ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப்பட்டா இடத்தை, ஆக்கிரமித்துள்ளவர்களை அப்புறப்படுத்த வேண்டுமென்று, மாவட்ட நிர்வாகத்துக்கு பட்டா பெற்ற நில உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த 2017ம் ஆண்டு, கோவை வடக்கு தாலுகாவுக்குட்பட்ட, தெலுங்குபாளையம் கிராமத்தில் பூலுவபட்டி, நாதேகவுண்டன்புதுார், ஆலாந்துறை பகுதிகளை சேர்ந்த வீடு இல்லாத ஏழை மக்கள் ஏழு பேருக்கு, வீட்டு மனைபட்டா வழங்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் ஒரு சென்ட் வீதம் வீட்டுமனை காலி இடம் வழங்கப்பட்டது.
வழங்கப்பட்ட இடத்தில் வீடு கட்ட, கடந்த ஏழு ஆண்டுகளாக பட்டா பெற்றவர்கள் போராடுகின்றனர். அதிகாரிகளிடமும் புகார் மனுக்களை கொடுக்கின்றனர். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற மறுக்கின்றனர்.
ஏனென்றால், 2000ம் ஆண்டில் ஏழு பேருக்கு, அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்டது. அந்த பட்டாக்கள் சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. ஆனால் ஆவணத்தில் மட்டுமே ரத்து செய்யப்பட்டது. செயற்பாட்டளவில் அங்கு குடியிருந்தவர்கள் இடத்தை காலிசெய்யவில்லை.
இது குறித்து புகாரின் பேரில், வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் பல முறை சென்று எச்சரித்தும், இடத்தை காலிசெய்ய மறுக்கின்றனர். அதனால் எங்களுக்கு வழங்கப்பட்ட பட்டா அடிப்படையில், இடத்தை எங்களது அனுபவ சுவாதீனத்திற்கு கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு, பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.